"ஹலோ சார் என் பொம்மைய காணும்" கம்பளைண்ட் செய்த சிறுவன்... ஆச்சரிய படுத்திய போலீசார்..! - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..

x

"ஹலோ சார் என் பொம்மைய காணும்" கம்பளைண்ட் செய்த சிறுவன்... ஆச்சரிய படுத்திய போலீசார்..! - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..

தெலுங்கானாவில் ரயிலில் தவறவிட்ட சிறுவனின் விளையாட்டு பொம்மையை, மேற்கு வங்கத்தில் உள்ள வீட்டிற்கே தேடி சென்று ரயில்வே போலீசார் ஒப்படைத்த நெகிழ்ச்சி சம்பவம், அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

செகந்தரபாத்தில் இருந்து அகர்தலா சென்ற ரயிலில் பயணித்த பூசின் பட்நாயக் என்பவர் ரயில்வே துறையின் 139 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டார். அதில், ரயிலில் தன்னுடன் சிறுவனுடன் பயணித்த தம்பதியினர், ரயிலை விட்டு இறங்கும் போது, நிறுவனின் விளையாட்டு பொம்மையை தவறவிட்டு சென்றதாக கூறியுள்ளர். மேலும், அந்த பொம்மை குழந்தைக்கு மிகவும் பிடித்து இருந்ததை தான் கவனித்தத்தாகவும், அதை குறிப்பிட்ட சிறுவனிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொண்டார். அவரின் கோரிக்கையை ஏற்ற ரயில்வே போலீசார், பயணத்திற்காக தம்பதிகள் முன்பதிவு செய்த தகவலில் இருந்த முகவரியை அறிந்தனர். பின்னர், மேற்கு வங்கத்தில் உள்ள சிறுவனின் வீட்டிற்கு சென்ற ரயில்வே போலீசார் சிறுவனிடம் பொம்மையை ஒப்படைத்தனர். ரயில்வேத்துறை அதிகாரிகள் மற்றும் சக பயணியின் செயலால் நெகிழ்ந்த சிறுவனின் தந்தை, நன்றியை தெரிவித்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்