தண்ணீர் அருந்திய ஒற்றை கொம்பன் யானை... - யாரையும் துன்புறுத்தாமல் வனப்பகுதிக்குள் சென்றது

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே, தண்ணீர் அருந்திய ஒற்றை கொம்பன் யானை, அமைதியாக வனப்பகுதிக்குள் சென்றது. நாய்க்கணுர் கிராமத்துக்குள் நுழைந்த கொம்பன் யானை, சத்திரம், அருணாசலம் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக சுற்றித் திரிகிறது. அருணாசலம் கொட்டாய் பகுதிக்கு சென்ற யானை, அங்குள்ள சின்டெக் டேங்கில் தண்ணீர் அருந்தி விட்டு, யாரையும் துன்புறுத்தாமல் வனப்பகுதிக்குள் சென்றது.


Next Story

மேலும் செய்திகள்