தலைக்கேறிய மது போதை - மருத்துவமனையில் மருத்துவர் செய்த அலப்பறை - வெளியான அதிர்ச்சி வீடியோ
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவில் சேலத்தை சேர்ந்த கமலநாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 10 வருடங்களாக இவர் பணியில் உள்ள நிலையில் அடிக்கடி மது குடித்து விட்டு வேலைக்கு வருவதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதனால் புதூர்நாடு பகுதிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்ட அவர், சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் ஆலங்காயம் வந்துள்ளார்.
சம்பவத்தன்று குடிபோதையில் பணிக்கு வந்த அவர், மருத்துவமனை வளாகத்தில் செய்த அலப்பறை வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..
Next Story