ஒரு தனபாலுக்காக நியாயம் கேட்க வந்த மற்றொரு தனபால் வெட்டி படுகொலை - வழக்கில் அதிர்ச்சி திருப்பம்

x

ஆடுதுறை அருகே, கொத்தனாரை 3 பேர் கொண்ட கும்பல் கொலை செய்த வழக்கில், முன்பகை காரணமாக நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரசிங்கம்பேட்டை பகுதியை சேர்ந்த கொத்தனார் தனபால் என்பவரை, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 2021ம் ஆண்டு தியாகராஜபுரத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவர், கள்ளத்தனமாக மது விற்ற வந்ததை, உயிரிழந்த தனபாலின் மைத்துனரான மற்றொரு தனபால் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சுந்தர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், சுந்தருக்கும், புகார் அளித்த தனபாலுக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மைத்துனர் தனபாலுக்கு ஆதரவாக உயிரிழந்த தனபால், சுந்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக, தனபால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தலைமறைவான நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்