தவறான உறவுக்குத் தடையான மனைவி.. சரமாரியாக வெட்டி கழுத்தை அறுத்த கணவன் - தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்

x

தென்காசி மாவட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த வாழ்ந்து வந்த மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு அழகுநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மகாகிருஷ்ணன்.வேன் ஓட்டுநரான இவர், மனைவி கனகாதேவி மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் மகா கிருஷ்ணணுக்கு அதே பகுதியை சேர்ந்த, திருமணமான பெண் ஒருவருடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்த மனைவி, ஒரு கட்டத்தில் மகாகிருஷ்ணனை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து இருக்கிறார். இதனிடையே மகாகிருஷ்ணன் மீது தவறான தொடர்பில் இருந்த பெண், அந்தரங்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து, மிரட்டுவதாக காவல்

நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் தனது மனைவி தான் என எண்ணிய மகாகிருஷ்ணன், கனாகாதேவி சரமாரியாக வெட்டி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஒடியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான மகாகிருஷ்ணணை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்