ஆன்-லைனில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு தயாரான புதுப்பெண் - கடைசியில் விழுந்த இடி... உஷார் மக்களே

x

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதீர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிகேசவன். இவரின் மனைவி சுதா தேவி. இதில், ஆதிகேசவன் தனக்கு திருமணமானதை மறைத்து ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் திருமண வரன் பார்த்து வந்துள்ளார். இதில், அதே வலைதளத்தில் பதிவு செய்திருந்த, செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், இரு வீட்டாரும் ஜூன் 1 ஆம் தேதி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இதையறிந்த ஆதிகேசவனின் நண்பர்கள் திருமண அழைப்பிதழை ஆதிகேசவனின் மனைவிக்கு அனுப்பிய நிலையில், அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். உடனே, பெண் வீட்டாரை தொடர்பு கொண்டு பேசிய அவர், ஆதிகேசவனுக்கும் தனக்கும் ஏற்கெனவே திருமணம் முடிந்து விட்டதாக தெரிவித்தது அவர்களை அதிர்ச்சியடைய செய்தது. இது குறித்து விசாரணை நடத்திய பெண் வீட்டாருக்கு, ஆதிகேசவனின் ஏமாற்று வேலை தெரியவரவே போலீசில் புகாரளித்தனர். இதனடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆதிகேசவனை கைது செய்த நிலையில், தலைமறைவான அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் முதல் மனைவி தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்