கணவனின் கஷ்டத்தை கண்டு துடித்த மனைவி... இருவரும் சேர்ந்து எடுத்த சோக முடிவு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்.
இவரின் மனைவி பாப்பாத்தி. இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு முதியவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யபட்டுள்ளது.
ஆனாலும், தீராத வலியால் அவதிப்பட்டு வந்த முருகேசனும், அதை பார்க்க இயலாமல் பாப்பாத்தியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு இருவரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து, சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story