இன்று வானில் நடக்கும் அரிய நிகழ்வு.. நாம் பார்க்கலாமா?
இன்று காலை 7.04 மணிக்கு பகுதி அளவாக தொடங்கும் சூரிய கிரகணம், காலை 8.07 மணிக்கு முழு சூரிய கிரகணமாக மாறுகிறது. இது, காலை 9.46 மணிக்கு உச்சத்தை அடைகிறது. பின்னர், காலை 11. 26 மணிக்கு முழு சூரிய கிரகணம் முடிவடையத் தொடங்கி, பகுதி அளவு சூரிய கிரகணமும் நண்பகல் 12.29 மணிக்கு முடிவடையும். இந்த அரிய நிகழ்வை தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் பிராந்தியம், இந்தியப் பெருங்கடல் பிராந்தியம், அன்டார்டிகா ஆகிய பகுதிகளில் இருந்து காண முடியும் என்று ஒடிசாவில் உள்ள பதானி சமந்தா கோளரங்கத்தின் துணை இயக்குனர் சுவேந்து பட்நாயக் கூறியுள்ளார்.
Next Story