பெண்களை விருந்தாக்கிய அரசியல் பிரமுகர்..? - வெளியான பகீர் வீடியோ

x

தூத்துக்குடி அருகே காங்கிரஸ் பிரமுகர் பெண்களை பலருக்கு விருந்தாகியதாக கூறும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த மரியராஜ் என்பவர், காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட பொறுப்பில் உள்ளார். இவர் கடந்த 17ஆம் தேதி காரில் சென்றபோது, கார் பழுதடைந்து நின்றதாக கூறப்படுகிறது. அப்போது 2 பேர் மரியராஜை தாக்கி, 20 லட்ச ரூபாய் கொடுத்தால் தான் விடுவிப்போம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடத்தல் காரர்களிடம் இருந்து மரியராஜை மீட்ட போலீசார், வீர சங்கலி என்பவரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, அப்பகுதியை சேர்ந்த சில பெண்களை உள்ளூர் பிரமுகர்களுக்கு விருந்தாக்கியதாக, மரியராஜ் கூறும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்