லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட விமானம் - ஆச்சரியத்துடன் கண்டு ரசித்த பொதுமக்கள்

x

லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட விமானம் - ஆச்சரியத்துடன் கண்டு ரசித்த பொதுமக்கள்

தனது பணிக்காலத்தை முடித்த விமானம் ஒன்றை ஏலம் எடுத்த ஆந்திராவைச் சேர்ந்த நபர், லாரி மூலமாக விமானத்தை எடுத்துச் சென்ற காட்சியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

விமானத்தைப் பார்த்ததும் பெரியவர், சிறியவர் என்றில்லாமல் எல்லோரது மனதுக்குள்ளும் பரவசம் ஏற்படும். அதுவும் விமானத்தை மிக அருகில் பார்க்கும் போது அந்த பரவசம் மேலும் அதிகரிக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் கேரளாவில் நடந்துள்ளது. ஏர் இந்தியாவின் விமானம் ஒன்று அதன் பணிக்காலம் முடிவடைந்த நிலையில் ஏலம் விடப்பட்டது. இந்த விமானத்தை, ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் ஏலம் எடுத்து, அதனை உணவகமாக மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, தான் ஏலம் எடுத்த அந்த விமானத்தை, லாரி மூலமாக ஹைதராபாத்திற்கு கொண்டு செல்லும் பணியில் அந்நபர் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, லாரியில் எடுத்துச் செல்லப்படும் விமானம், கேரளா மாநிலம், கொல்லம் புறவழிச்சாலை வழியாக தனது பயணத்தை தொடர்கிறது. அப்போது, நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரியில் உள்ள விமானத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து, அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இரவில் மட்டும் இயக்கப்படும் இந்த லாரி, 30 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுவதாகவும், ஹைதராபாத் சென்றடைய 20 நாள்கள் ஆகும் எனவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்