மாற்றுத்திறனாளிகள் தேடி வந்து வணங்கும் தலம்

மாற்றுத்திறனாளிகள் தேடி வந்து வணங்கும் தலம்
x

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து தீர்வு காணுபவர்களாகவும், நன்னெறி, ஒழுக்கம் தவறாதவர்களாகவும் இருப்பர்...

பிறருக்கு உதவி செய்து அதனால் ஆனந்தம் அடைபவர்களும் இவர்களே...

பூச நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் சனிபகவான்...

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வர பகவானை வணங்கினால் போதும்.. அனைத்தும் அவரின் அருளால் நிறைவேறும்...

ஒருமுறை எமதர்மராஜன் சனீஸ்வரனின் காலில் தாக்க அவருடைய கால் ஊனமானதாம். இதற்கு நிவாரணம் தேடி பல ஊர்களுக்கு சென்று அலைந்தாராம்...

அப்போது இத்தலம் இருந்த இடத்திற்கு வந்த போது விலாமர வேரில் கால் இடறி விழுந்துள்ளார்...

அப்போது பல காலமாக மறைந்திருந்த பூச ஞானவாவி தீர்த்தம் சுரந்துள்ளது...அதிலிருந்து சிவபெருமான் அட்சயபுரீஸ்வராக காட்சி கொடுத்து சனி பகவானின் ஊனத்தை சரி செய்தார் என்கிறது வரலாறு...

இந்நிகழ்வு நடந்த நாள் பூசம் நட்சத்திர நாள் என்பதால் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நன்மை உண்டாகும்...

இங்கு மூலவராக அட்சயபுரீஸ்வரரும், அபிவிருத்த நாயகியும் காட்சி தருகின்றனர்...

இங்கு சனீஸ்வர பகவான் மந்தா தேவி, ஜேஸ்டா தேவி தாயார்களுடன் ஆதி பிருஹத் சனீஸ்வரராக காட்சி தருகிறார்...

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவியர் சமேதராக உள்ள சனீஸ்வர பகவானை வணங்கினால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்...

சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் விளக்கு போட்டு சனிபகவானின் மந்திரம் சொல்லி வழிபாடு செய்து, காக்கைக்கு உணவு வைத்த பின்பு காலை உணவு எடுத்து கொண்டால் சகல தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்...

மேலும் மாற்று திறனாளிகள் இங்கு வந்து மூலவரையும், சனிபகவானையும் தரிசித்தால் நன்மை கைகூடும் என்கிறார்கள்.

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம் நாளில் தேன், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட எட்டு பொருட்களால் அபிஷேகம் செய்து சனி பகவானை எட்டு முறை சுற்றி வந்து வழிபட கர்ம வினைகள் யாவும் நீங்கிவிடுமாம்...

சனி பகவானை வணங்கிய பின்பு இக்கோயிலில் உள்ள சூரிய பகவான் பைரவர் உள்ளிட்ட இதர தெய்வங்களை வணங்குவது கூடுதல் பலனை அளிக்கும்...

கோயிலானது காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும், சனிக்கிழமை மற்றும் பூசம் நட்சத்திர நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்...

பேராவூரணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவு பயணித்தால் கோயிலை வந்தடையலாம...

ஆயில்யம் நட்சத்திரத்திரகாரர்கள் வணங்க வேண்டிய கோயிலின் சிறப்பை நாளைய தினம் ஒரு தரிசனம் பகுதியில் பார்க்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்