ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக வந்த போன் கால்... அதிர்ந்த போலீசார் -கோவையில் பரபரப்பு

x

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள சூலூர் ரோடு என அழைக்கப்படும் ரயில் நிலையத்திலும், புதிய பேருந்து நிலையத்திலும் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக மர்ம நபர் ஒருவர் போலீசாரின் புகார் எண் 100க்கு அழைத்து தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை செய்தனர். அங்கு வெடிகுண்டு எதுவும் கைப்பற்ற படாத நிலையில், தொலைபேசியில் அழைத்த நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர், சூலூர் காவல் நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த முத்துகாதர் என்பது தெரியவந்தது. வீட்டில் இருந்த முத்து காதரை மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் ஏதேனும் அமைப்புடன் தொடர்பில் இருக்கிறாரா என்பது குறித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்