கடற்கரையில் திடீரென அலைகளின் இடையே தென்பட்ட பாதை
கடற்கரையில் திடீரென அலைகளின் இடையே தென்பட்ட பாதை
திருச்செந்தூர் அருகே காட்டுமெகதும் பள்ளி கடற்கரையில் பழங்கால நடைபாதை போன்ற பகுதி தென்பட்டுள்ளது. அதை தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
நெல்லை மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம், மாணவர்களுடன் திருச்செந்தூர் கடற்கரையில் நடந்து சென்றபோது, வீரபாண்டியன்பட்டினத்திற்கும் ஓடக்கரைக்கும் இடையே 250 மீட்டர் நீளத்தில் சுவர் போன்ற அமைப்பு இருப்பதைக் கண்டுள்ளார்.
அது பழங்கால சுவராகவோ அல்லது பாதையாகவோ என்று கூறியுள்ள அவர், இதுதொடர்பாக தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story