கோவையை உலுக்கிய +2 மாணவி தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்
கோவையில் 12 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், மேலும் சிலரை விசாரிக்க அனுமதி கேட்டு போக்சோ நீதிமன்றத்தில் போலிசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவையில் கடந்த 2021ஆம் ஆண்டு, 12 ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, 3 பேரிடம் விசாரணை முடிந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கும் என்பதால், மேல் விசாரணைக்கு அனுமதி கோரி அரசு தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, மேலும் ஒரு குற்றவாளியை வழக்கில் சேர்க்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Next Story