வங்க கடலில் உருவாகிறது புதிய புயல்

x

வங்கக் கடல் பகுதியில், புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, தென்கிழக்கு, அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 22ஆம் தேதி வலுப்பெறும் எனவும், இதைத் தொடர்ந்து மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயல் சின்னமாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்