இந்தியாவில் இளைஞர்களுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல் - அதிகமாகும் வேலையின்மை விகிதம்..?

x

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் வேலையின்மை குறித்து இந்திய பொருளாதாரத்தை கணிக்கும் சிந்தனை குழு ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த அக்டோபர் மாதத்தை காட்டிலும் நவம்பர் மாதம் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது அக்டோபர் மாதம் 7 புள்ளி 77 சதவீதமாக இருந்த வேலையின்மையின் எண்ணிக்கை, நவம்பர் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நகர்ப்புறத்தில் 8 புள்ளி 96 சதவீதமாக அதிகரித்துள்ள வேலையின்மை விகிதம், கிராமப்புறங்களில் 7 புள்ளி 55 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்