கனவை போராடி வென்று கெத்தாக நிற்கும் நீட் சாதனை மாணவி

x

தார் சாலை கூட இல்லாத கிராமத்தில் படித்து நீட் தேர்வில் வென்று மருத்துவக் கனவை நனவாக்கி அசத்தியுள்ளார் சிவகங்கை மாணவி ஒருவர்...

சிவகங்கை சிங்கம்புணரி தாலுகா மட்டாங்காடு எனும் குக்கிராமத்தில் பிறந்தவர் கூலித் தொழிலாளியின் மகள் அன்னபூரணி... 9ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே தன் பெயருக்குப் பின்னால் எம்.பி.பி.எஸ் எனும் பட்டத்தை சேர்த்து எழுதும் அளவுக்கு அன்னப்பூரணிக்கு மருத்துவக் கனவு ரத்தத்திலேயே ஊறிப் போயிருந்தது... கனவை நனவாக்க நீட் தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர்கள் subashini, முத்துராமலிங்கம், காளிதாஸ், ஜெயபிரகாஷ் ஆகியோர் அன்னப்பூரணிக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளனர்... மட்டாங்காட்டில் இருந்து அரசு மருத்துவமனை செல்லவே சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எஸ்.புதூர் செல்ல வேண்டும்... பேருந்தே இல்லாத இந்த கிராமத்தைச் சேர்ந்த அன்னப்பூரணி, தன் கிராம மக்கள் படும் கஷ்டங்களை உணர்ந்து படித்து நீட் தேர்வு எழுதி 538 மதிப்பெண்கள் எடுத்து சிவகங்கை மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். தொடர்ந்து தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் 5ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். இந்நிலையில் தங்கள் மாணவியான அன்னப்பூரணியை உலகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் மனமாற வாழ்த்தி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்