நாடாளுமன்றத்திற்குள் வெடிகுண்டுகளுடன் நுழைந்த மர்ம நபர்.. அலறி ஓடிய எம்பிக்கள்
ஸ்விட்சர்லாந்து நாடாளுமன்றத்திற்குள் வெடிகுண்டுகளுடன் மர்ம நபர் புகுந்ததால், உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். புல்லட் புரூஃப் உடை அணிந்துகொண்டு காரில் வந்து இறங்கிய மர்ம நபர், நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் படையினர், துப்பாக்கி வெடிகுண்டுகள் வைத்திருந்ததால் கைது செய்தனர். இதையடுத்து, நாடாளுமன்றம் பகுதியில் பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டது. நாடாளுமன்றம் மற்றும் அருகில் உள்ள கட்டடங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, மோப்ப நாய்கள், ட்ரோன்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. இதனால், நாடாளுமன்றம் உள்ள பகுதி பரபரப்பாக காணப்பட்டது
Next Story