காரின் பேனட்டில் இழுத்து செல்லப்பட்ட நபர்....பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்
பெங்களூர் ஞானபாரதி போலீசள்ளைக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு கார்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தில் விபத்தை ஏற்படுத்திய பெண்ணை காரை விட்டு இறங்குமாறு மற்றொரு கார் உரிமையாளர் கூறிய போது திடீரென அந்த பெண் காரை கிளப்பிச் சென்றதால் தடுப்பதற்காக பேனட் மீது அமர்ந்ததால் அப்படியே ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை காரை அந்தப் பெண்மணி ஓட்டியுள்ளார்.
ஞானபாரதி போலீஸ் வேலைக்கு உட்பட்ட சாலையில் பிரியங்கா என்ற பெண்மணி ஒட்டி வந்த காரும் தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் வந்த காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்கு காரணம் பிரியங்கா தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சேதமடைந்த தனது வாகனத்தை சரி செய்து கொடுக்குமாறு தர்ஷன் பிரியங்காவிடம் கேட்டுள்ளார். ஆனால் பிரியங்கா காரில் இருந்து இறங்காமல் தர்ஷனுடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் காரில் இருந்து இறங்குவது போல் நடித்து திடீரென காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி இருந்த தர்ஷன் காரின் முன்னே நின்று காரை நிறுத்த வேண்டும் முயன்றுள்ளார்.
ஆனால் பிரியங்காவோ அதை பொருட்படுத்தாமல் தர்ஷன் மீது காரை மோதியபோது தர்ஷன் பிரியங்காவின் கார் பேனட் மீது விழுந்தார் அதைக் கண்டு கொள்ளாமல் காரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓட்டி சென்றார். பின்னர் மடியில் இருந்த வாகன ஓட்டிகள் எச்சரித்ததால் அதன் பின்னர் பிரியங்கா காரை நிறுத்தினார். இச்சம்பவம் தொடர்பாக பிரியங்கா மற்றும் தர்ஷன் ஆகியோர் தனித்தனியே போலீசில் புகார் அளித்தனர். பிரியங்கா அளித்துள்ள புகாரில் தர்ஷன் மட்டும் அவரது நண்பர்கள் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார். இதே போல் தர்ஷன் விபத்தை ஏற்படுத்தி விட்டு தன்னை கொலை செய்யும் நோக்கில் வாகனத்தை இயக்கியதாக புகார் அளித்துள்ளார். இதை எடுத்து பிரியங்கா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரின் பேனட்டில் இழுத்து செல்லப்பட்ட நபர்....பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்காரின் பேனட்டில் இழுத்து செல்லப்பட்ட நபர்....பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்இருசக்கர வாகனத்தில் முதியவரை இழுத்துச் சென்ற சுவடு மறையாத நிலையில் மேலும் அதே போன்ற ஒரு சம்பவம் தலைநகர் பெங்களூருவில் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.