"லைக்ஸ்காக லைஃப் தொலைச்சிராதீங்க" ரயிலில் தொங்கி டான்ஸ் ஆடிட்டு செல்லும் இளைஞர்களின் மோசமான செயல்

x

சென்னை புறநகர் ரயிலில், ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்கள் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடைமேடையில் காலை தேய்த்துக் கொண்டு, ஆபத்தான முறையில் பயணிக்கும் இளைஞர்கள், நடந்துச் செல்லும் பயணிகளின் காலை தட்டி விட்டுச் செல்கின்றனர்.

மேலும், புறநகர் ரயில் வேகமாக செல்லும் போது, ரயிலின் வெளிப்புறம் தொங்கியபடியும், நடனமாடியும் பயணிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், ஆபத்தான முறையில் பயணிக்கும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்