மனைவியின் கள்ளக்காதலன் என நினைத்து..அப்பாவியை கொடூரமாக கொன்ற நபர் - இரவில் மாடியில் நடந்த பயங்கரம்
திருச்செந்தூர் அருகே உள்ள ராஜ்கண்ணா நகரைச் சேர்ந்த கந்தசாமிக்கும், அவருடைய மனைவி சினேகாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு தாமதமாக வீட்டுக்கு வந்த சினேகாவுக்கும், கந்தசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கந்தசாமி மீது திருச்செந்தூர் காவல் நிலையத்தில் சினேகா புகார் அளித்தார். அப்போது, கந்தசாமி போதையில் இருந்ததால், மறுநாள் காலை விசாரணைக்கு வரும்படி போலீசார் அனுப்பி வைத்தனர். மறுநாள் காலையில், கந்தசாமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும், ராஜஸ்தானைச் சேர்ந்த ஐஸ்கிரீம் வியாபாரி வினோத் தரேகான் என்பவர், கந்தசாமியின் வீட்டின் மொட்டை மாடியில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், போதையில் இருந்த கந்தசாமி, தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருப்பவர்தான் மொட்டை மாடியில் உறங்குவதாக நினைத்து, தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கந்தசாமியை போலீசார் கைது செய்தனர்.