சவரக் கத்தியால் காதலியின் கழுத்தை கரகரவென அறுத்து கொல்ல முயன்ற காதலன்
கேரளாவில் காதலித்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை முயன்ற காதலனை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருச்சூர் எம்.ஜி.சாலையில் உள்ள உணவகத்தில் இளம்பெண்ணும், இளைஞர் ஒருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த இளைஞர் கையில் மறைத்து வைத்திருந்த சவரக் கத்தியை எடுத்து, காதலியின் கழுத்திலும் முதுகிலும் குத்தியுள்ளார்.
இளம்பெண் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் இளைஞரை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர் கொடுங்கல்லூரை சேர்ந்த விஷ்ணு என்பதும், வாக்குவாதம் முற்றியதால் கொலை செய்ய முயன்றதும் தெரிய வந்துள்ளது.
காயமடைந்த இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story