ஆடு, நாய்களை வேட்டையாடிய சிறுத்தை - பீதியில் உறைந்த மக்கள்

x

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சிறுத்தை புலி நடமாட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருக்கூர் ஊராட்சிக்குட்பட்ட செஞ்சுடையாம்பாளையத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் ஆடு, நாய் உள்ளிட்டவை மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனையடுத்து அப்பகுதியில், வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ள நிலையில், விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்