திருப்பதி மலைப்பாதையில் பதுங்கி இருந்த சிறுத்தைப்புலி! - பீதியில் பக்தர்கள்

x

திருப்பதி மலையில் உள்ள முதலாவது மலைப்பாதையில் இருக்கும் 30வது வளைவு அருகே சாலை ஓரத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை புலியைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வாகனங்களில் சென்று கொண்டிருந்த பலர் வாகனங்களை நிறுத்தி இறங்கி ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்க்கத் துவங்கிய நிலையில் சிறுத்தைப்புலி அங்கிருந்து நகர்ந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது... தகவலறிந்து வந்த வனத்துறையினர் தேடிப் பார்த்த போது அது மாயமாகி இருந்தது. இதையடுத்து திருப்பதி மலையில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்