கறி விருந்துக்கு சென்ற கூலித்தொழிலாளி...காவிரி ஆற்றில் கிடந்த உடல் - அதிர்ச்சி சம்பவம்

x
  • திருச்சி அருகே கறி விருந்துக்கு சென்ற கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..
  • திருச்சி மாவட்டம், முசிறி மலையப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர்.
  • இவர்கள் குடும்பத்தோடு கரூரில் வசித்து வந்த நிலையில், செல்வராஜ் முசிறி அருகே கொக்கு வெட்டியான் கோயிலில் கறி விருந்துக்கு சென்றுள்ளார்.
  • அங்கு, காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் தலையில் பலத்த காயங்களுடன் செல்வராஜ் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • அவரின் சடலத்தை மீட்ட போலீசார், கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்