சிக்கிய IFS நிறுவனத்தின் முக்கிய ஏஜெண்ட் - காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்

x

ஐஎப்எஸ் நிறுவனத்தின் முக்கிய ஏஜெண்டான ஹரிஹரன் என்பவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஐ.எப்.எஸ் நிதி நிறுவனம் பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று ஏமாற்றியது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய ஏஜெண்ட்டுகள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் ஹரிஹரன் என்பவரை கடந்த 8ஆம் தேதி கைது செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர். இவர் கடந்த 2020 முதல் 2022-ம் ஆண்டுக்குள் சுமார் 600 முதலீட்டாளர்களிடமிருந்து 231 கோடி ரூபாய் வரை முதலீடாக பெற்று ஐஎப்எஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். கமிஷனாக மட்டும் ரூ.10 கோடி பெற்றுள்ளார். இந்த கமிஷன் தொகை மூலம் ஒரு பிளாட், கோவையில் காலி மனை, விவசாய நிலம், சொகுசு கார் என வாங்கிய இவரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வும் திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்