ஆன்லைன் ரம்மியால் நடந்த நாடகம்.. ஓவராக அழுது புலம்பிய கணவர்.. போலீஸ் விசாரணையில் ட்விஸ்ட் | Nellai
ஆன்-லைன் ரம்மி விளையாடுவதற்காக சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய கோழிப்பண்ணை உரிமையாளர் போலீஸாரிடம் வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நெல்லை மாவட்டம் கரைச்சுத்து புத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் செல்வ ஷோபனா. இவரது வீட்டில், 12 சவரன் நகை, 17 ஆயிரம் ரூபாய் காணாமல் போனதாக உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஷோபனா வீட்டிலிருந்தே விசாரணையை தொடங்கினர். அப்போது ஓவராக அழுது புலம்பிய ஷோபனாவின் கணவர் ஜார்ஜ் மீது, போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. அவரை தனியாக அழைத்த போலீஸார் தங்களுக்கே உரிய பாணியில் விசாரணை நடத்தினர். இதில், ஜார்ஜ் ஆன்-லைன் ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்தது, தெரியவந்தது. உடனடியாக ஜார்ஜை கோழிப்பண்ணைக்கு அழைத்துச்சென்று விசாரித்ததில், மனைவியின் நகை, பீரோவில் இருந்த பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். கணவன்-மனைவி இருவரையும் காவல்நிலையம் அழைத்த போலீஸார், ஜார்ஜ்-ஐ எச்சரித்து, மீதமுள்ள நகைளை ஷோபனாவிடம் ஒப்படைத்தனர்.
Next Story