திருவிழாவில் தோள் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்த பச்சைக்கிளி - ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற மக்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, கோபாலபுரம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவை ஒட்டி, புஷ்ப பல்லக்குகள் திருவீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர், இரவு முழுவதும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை பூப்பல்லக்கு திருவிழாவை காண வந்த ஒருவரது தோள் மீது, பச்சைக்கிளி ஒன்று எந்த பதற்றமும் இன்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. பூப்பல்லக்கை காண வந்த பொதுமக்கள் ஏராளமானோர், பச்சைக் கிளியையும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
Next Story