'SLE என்னும் அரியவகை நோய்....' இரு கால்களை இழக்க இருந்த சிறுமி.. முதல்வர் ஸ்டாலின் செய்த அதிரடி செயல்
சீர்காழியை சேர்ந்த அபிநயா என்ற சிறுமி, SLE என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் இரு கால்களையும் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில், இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கால்களை எடுக்காமலேயே சிறுமிக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Next Story