மீன்களுக்கு உணவளிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்
கேரளாவில், மீன்களுக்கு உணவளிக்கச் சென்ற சிறுமி, குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுங்கண்டம் பகுதியைச் சேர்ந்தஅனாமிகா என்ற 16 வயது சிறுமி, தனது வீட்டின் அருகே இருக்கும் குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று சிறுமி மீன்களுக்கு உணவளித்த போது, சிறுமியின் செருப்பு குளத்தில் விழுந்துள்ளது. அதனை எடுக்க குளத்தில் இறங்கியபோது, சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார். சிறுமியின் சடலம் உடற்கூராய்விற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story