நன்கொடை வசூலிப்பது போல் நோட்டம்.. அப்படியே சிலிண்டரை திருடிச் சென்ற நபர்.. குழந்தையுடன் வேறு பக்கம் எஸ்கேப்பான பெண்கள்

x

சென்னை குரோம்பேட்டையில், வீட்டில் இருந்த சிலிண்டரை அடையாளம் தெரியாத ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. குரோம்பேட்டை நியூ காலனி பகுதியில், நன்கொடை வசூலிப்பது போல், கைக் குழந்தையுடன் வந்த இரண்டு பெண்கள், ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருவதாகவும், அதற்கு நன்கொடை வேண்டும் எனவும் பெண் ஒருவரிடம் கேட்டதாக தெரிகிறது. பின்னர், ஆண் ஒருவரிடம் நன்கொடை கேட்ட இருவரும், சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றனர். இதனிடையே, ஒரு வீட்டுக்குள் சென்ற அடையாளம் தெரியாத நபர், சிலிண்டரை திருடிச் சென்றார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்