தூரத்து சொந்தம் னு சொல்லி கைவரிசை காட்டிய பலே திருட்டு கும்பல்

x

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ளது இடலாக்குடி பகுதி… அதே பகுதியிலுள்ள வேதநகரில் வசித்து வருபவர் உமர் சாகிப். இவருக்கு திருமணமாகி யாஸ்மீன் என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். உமர் சாகிப் வெளிநாட்டில் டிரைவராக வேலைச் செய்து ஒன்றரை வருடத்திற்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த உமர் சாகிப் வீட்டு அருகில் நிறைய இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர்…

சம்பவம் நடந்த அன்று மாலை உமர்சாகிப் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் பர்தா அணிந்தவாரு வெள்ளை நிற காரில் உமர்சாகிப் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அந்த கும்பல் தங்களை யாஸ்மினின் தூரத்து உறவினர்கள் என்றும்… கிரஹபிரவேசத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக வந்துள்ளதாக கூறி அறிமுகம் செய்திருக்கிறார்கள்… சிறிது நேரத்தில் உமர்சாகிப்பிடம் பேச்சு கொடுத்த அந்த கும்பல் திடீரென்று துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களை காட்டி உமர்சாகிப்பின் வாயை அடைத்து கட்டி போட்டிருக்கிறது.

பிறகு வீட்டிலிருந்த இருபது சவரன் நகையை கொள்ளையடித்திருக்கிறது அந்த பர்தா கும்பல். களவாடிய நகைகளோடு எஸ்கேப் ஆகவிருந்த சமயத்தில் தான் வெளியில் சென்ற உமர்சாகிப்பின் மனைவி வீட்டிற்கு வந்துள்ளார். கையும் களவுமாக சிக்கிகொண்டதால் திகைத்துபோன அந்த கும்பல் உமர்சாகிப்பிடம் உருட்டிய அதே கதையை யாஸ்மினிடமும் கூறியிருக்கிறது… உமர்சாகிப் உடல்நலக்குறைவால் மாடியில் படுத்திருப்பதாக கூறி அவர்களை திசை திருப்பி தப்ப முயன்றுள்ளனர். மாடிக்குச் சென்ற யாஸ்மின் உமர்சாகிப் வாயில் டேப்புடன் இருப்பதை கண்டு சந்தேகமடைந்திருக்கிறார்.வீட்டிற்கு வந்தது உறவினர்கள் அல்ல கொள்ளை கும்பல் என்பதை உறுதிச் செய்து கத்தி கூச்சலிட்டிருக்கிறார்.

உடனே அந்த கொள்ளை கும்பல் காரில் ஏறி தப்ப முயன்றிருக்கிறார்கள். ஆனால், கார் ஸ்டார்ட் ஆகாதால் பர்தா அணிந்த கொள்ளை கூட்டம் ஆளுக்கு ஒருபக்கம் தப்பிச் சென்றிருக்கிறது. அதில் மூன்று பேர் மட்டும் பொதுமக்களிடம் வசமாக சிக்கியிருக்கிறார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் ஹிஜாப் கொள்ளை கும்பலின் பின்னணி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.இடலாக்குடி பகுதியைச் சேர்ந்த ரஹீம், அமீர் ஆகி இருவரும் ஏற்கனவே பல கொள்ளை வழக்குகளில் சிறைக்குச் சென்றி பெயிலில் வந்த பலே கொள்ளையர்கள்…

உமர்சாகிப் வீட்டை வெகுநாட்களாக நோட்டமிட்டு வந்த இந்த கும்பல், அவரது வீட்டில் குறைந்தது100 சவரன் நகையாவது இருக்கும் என்று தப்பு கணக்கு போட்டிருக்கிறார்கள். 100 சவரன் நகைகளை கொள்ளையடித்து, லைப்பில் செட்டிலாக நினைத்திருக்கிறது இந்த கும்பல். போலியான நம்பர்பிளேட் ஒட்டி கொண்டு, 5 பேரோடு களம் இறங்கியிருக்கிறார்கள்.கடைசியில் பர்தா கொள்ளையர்களின் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீனாகிவிடவே காவல்துறையிடம் வசமாக சிக்கியிருக்கிறார்கள்.ஏற்கனவே மூன்றுபேரை கைதுச் செய்த போலீசார் தப்பிச்சென்ற நான்கு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்…


Next Story

மேலும் செய்திகள்