மனைவியை அபகரித்து எதிர் வீட்டில் வைத்தே குடும்பம் நடத்திய நண்பன்-கடும் கோபத்தில் கணவன் செய்த காரியம்

x

ஓமலூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி பகுதியில் வசித்து வரும் பாலமுருகனுக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. பாலமுருகனின் நண்பரான மணிகண்டனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், இருவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வந்த நிலையில், சில நாட்களுக்குப் பிறகு, பாலமுருகனின் வீட்டிற்கு எதிரேயே குடியேறியுள்ளனர். தாயைக் கண்டதும் 2 வயது குழந்தை அந்த வீட்டிற்கு சென்று வந்ததால், ஆத்திரமடைந்த பாலமுருகன், வீட்டிற்கு எதிரே குடிவந்ததை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அலட்சியமாக பதில் சொன்ன மணிகண்டனை, ஆத்திரமடைந்த பாலமுருகன் சரமாரியாக கத்தியால் தாக்கியதில் படுகாயமடைந்தார். இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிகண்டன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பாலமுருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்