நண்பருடன் சேர்ந்து வெறியாட்டம்... பெத்த மனசை கொதிக்க வைத்த பிள்ளை - பரபரப்பு காட்சிகள்
நாகர்கோயிலில் நண்பருடன் சேர்ந்து தாய் மற்றும் தங்கையை மிரட்டிவிட்டு, அரிவாளுடன் சுற்றிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோயில் ராமன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர், மனைவியுடன் தனியாக வசித்து வரும் நிலையில், தனது தாய் பிரேமாவிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், பிரேமா பணம் தர மறுத்ததால், மது குடித்துவிட்டு, நண்பருடன் வீட்டுக்கு சென்ற நாகராஜன் தகராறிலும் ஈடுபட்டுள்ளார். அப்போது, தாய் பிரேமா மற்றும் தங்கையையும் மிரட்டிவிட்டு, தெருவில் அரிவாளை சுழற்றிக்கொண்டு சென்றுள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதே நேரத்தில், நாகராஜன் மீது பிரேமா புகார் அளிக்கவில்லை. எனினும், வீடியோ அடிப்படையில் நாகராஜனை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story