விடுதலையாகியும் பிரிந்து சென்ற கணவன் - கண்ணீருடன் வேன் பின்னால் ஓடிய நளினி

x

விடுதலையாகியும் பிரிந்து சென்ற கணவன் - கண்ணீருடன் வேன் பின்னால் ஓடிய நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனி சிறையில் அடைக்கப்பட்ட நளினி, 31 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையானார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, சாந்தன் உள்ளிட்ட ஆறு பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதன் காரணமாக, வேலூர் பெண்கள் தனிச்சிறைக்கு சென்ற நளினி, தனது பரோலை ரத்து செய்துவிட்டு அதற்கான கடிதத்தை சிறை நிர்வாகத்திடம் அளித்தார். இதனிடையே, சிறை நடவடிக்கைகள் முடிந்து 31 ஆண்டுகளுக்கு பிறகு நளினி விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து, ஆண்கள் மத்திய சிறையில் இருந்து விடுதலையான கணவர் முருகனை சந்தித்து கதறி அழுதார். அப்போது, முருகன் 100 ரூபாய் பணம் கொடுத்து நளினியை ஆறுதல்படுத்தியது சிறை வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள வீட்டுக்கு நளினி அழைத்துச் செல்லப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்