4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவர்
நெல்லை மாவட்டம் உவரி அருகே நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், மீனவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பெரியதாழை பகுதியைச் சேர்ந்த மீனவர் வெலிங்டன் அதே பகுதியைச் சேர்ந்த நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், மீனவர் வெலிங்டன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
Next Story