சென்னையில் உணவகத்தில் தீ விபத்து.. காரணம் என்ன?

x

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உணவகத்தின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த புகைபோக்கி திடீரென தீப்பிடித்து எரிந்தது. பின்னர், தகவலரிந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். விசாரணையில் புகைபோக்கியில் திட்டுத்திட்டாக படிந்திருந்த எண்ணெய் கசடுகள், அதிக வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்