அமைதியான நதி என்று நினைத்து நடுப்பகுதி வரை சென்ற குடும்பம் - திடீரென நேர்ந்த பயங்கரம்

x

தர்மபுரி மாவட்டம் தொல்லகாது பகுதியை சேர்ந்த சின்னசாமி, தனது குடும்பத்துடன் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துக்கொண்டு, அப்பகுதி ஆற்றின் நடுவே உள்ள பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தால், அனைவரும் ஆற்றின் நடுவிலேயே சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று சின்னசாமியின் மகன் குமாரை மீட்டனர். இதன் பின்னர் இரவில் நிறுத்தப்பட்ட மீட்புபணி, அதிகாலையில் மீண்டும் தொடங்கப்பட்டு, ஆற்றின் நடுவே சிக்கியிருந்த சின்னசாமி, அவரது மனைவி, மகள் மீட்கப்பட்டனர். 24 மணி நேரத்திற்கு பிறகு ஆற்றின் நடுவே சிக்கி தவித்த மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்