சாலையோரம் காத்திருந்த மாற்றுத்திறனாளி - காரை நிறுத்தி மனுவை பெற்ற முதல்வர்
நாகர்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு தூத்துக்குடி விமான நிலையத்துக்கு செல்லும் வழியில், சாலையோரம் குடும்பத்தினருடன் நின்று கொண்டிருந்த மாற்றுத் திறனாளியைக் கண்டு காரை நிறுத்திய முதல்வர் ஸ்டாலின், அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுச் சென்றார். 5 ஆண்டுகளுக்கு முன்பு, தூத்துக்குடி சந்தையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மூட்டை விழுந்ததில் கழுத்து முறிவு ஏற்பட்டு மாற்றுத் திறனாளியாகி விட்ட செல்வகுமார், 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள தனது மனைவிக்கு ஏதாவது வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story