பணிபுரிந்த நிறுவனத்தில் திருடிய தம்பதி..புதிய நிறுவனம் தொடங்கி மோசடி

x

சென்னையில், தனியார் இன்சூரன்ஸ் கன்செல்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள், ஆவணங்களை திருடி பணத்தை கையாடல் செய்த புகாரில், 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரியமேடு பகுதியை சேர்ந்த சூரியநாராயணன் என்பவர், அதே பகுதியில் இன்சூரன்ஸ் கன்செல்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் 30க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் நிலையில், சென்னை பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கொரோனா காலகட்டத்தின் போது பணியில் இருந்து நீக்கப்பட்ட தமிழ்செல்வி மற்றும் கோமதி ஆகியோர், நிறுவன மின்னஞ்சல்கள் மூலம் ஆவணங்களை திருடியதாகவும், அதன் பிறகு புதிய நிறுவனத்தை தொடங்கி, ஆவணங்களை வைத்து வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு பணத்தை கையாடல் செய்ததாக தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், முறைகேட்டில் ஈடுபட்ட இம்மானுவேல் கடந்த மாதம் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான தமிழ்செல்வி மற்றும் அவரது கணவரும், ஆசிரியருமான சங்கரநாராயணன், தற்போது கைது செய்தனர். இதுதொடர்பான விசாரணையில், போலியான ஆவணங்களை தயாரித்து நிறுவனத்தை தொடங்கி இருப்பதும், அதில் 15 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பதும் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்