கோடிக்கணக்கில் மோசடி செய்த ஜோடி... வலையில் சிக்கிய 500க்கும் மேற்பட்டோர் - தலைநகர் சென்னையில் அதிர்ச்சி

x

சிறு தொழில் செய்ய வாய்ப்பு வழங்குவதாக கூறி, பொது மக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த மகாதேவ் பிரசாத் மற்றும் அவருடைய மனைவி ஜெயஸ்ரீ ஆகிய இருவரும், அப்பகுதியை சேர்ந்த் மக்களிடம், சிறு தொழில் செய்ய வாய்ப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட உணவு தானியங்களை பாக்கெட் செய்து கொடுத்தால், ஒரு பாக்கெட்டிற்கு 2 ரூபாய் கொடுக்கப்படும் எனவும், இதற்கு முன் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய பொதுமக்கள் ஏராளமானோர், இவர்கள் நடத்திவரும் மோகா எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தில்

முதலீடு செய்தனர். ஆனால் எந்த வேலையும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால், பாதிக்கப்பட்டவர்கள் மகாதேவ் பிராசாத்தை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் பிடித்து கொடுத்தனர். மேலும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மத்திய குற்றபிரிவு போலீசார், கணவன் மனைவி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மகாதேவ் பிராசத் திமுக பிரமுகர் எனவும் கூறி வந்துள்ளாதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.




Next Story

மேலும் செய்திகள்