கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை- கையில் எழுதப்பட்டிருந்த பேருந்தின் எண்..? - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்
ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த கொடுமுடி போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மாணவி 12ஆம் வகுப்பு மார்க் சீட் வாங்குவதற்காக சிவகிரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பேருந்தில் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அப் பேருந்தின் எண்ணை மாணவி தனது கையில் எழுதி வைத்திருந்ததாகவும், அதுகுறித்து பெற்றோர் கேட்ட போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story