ஓய்வு பெற்ற தபேதாரை தன் சேரில் அமர வைத்து அழகு பார்த்த கலெக்டர் - புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில், பணி ஓய்வு பெற்ற தபேதாரரை, காரில் தன்னுடைய இருக்கையில் அமர வைத்து மாவட்ட ஆட்சியர் வழி அனுப்பி வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற தபேதாரர் அன்பழகனுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. ஆட்சியர் கவிதா ராமு பாராட்டி வாழ்த்தி பேசினார். பின்னர், தனது கார் கதவை திறந்துவிட்ட ஆட்சியர் கவிதா ராமு, தன்னுடைய இருக்கையில் அன்பழகனை அமரவைத்து வீட்டுக்கு வழி அனுப்பி வைத்தார். இந்த காட்சி காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்தது.
Next Story