மாற்றுத்திறனாளி மாணவனின் நடனத்திற்கு தனது பேனாவை பரிசாக கொடுத்த கோவை கலெக்டர்
கோவையில், மாற்றுத்திறனாளி மாணவன் அசத்தலாக நடனமாடியதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அந்த மாணவனுக்கு தனது பேனாவை கொடுத்து வாழ்த்தினார்.
கோயம்புத்தூரில், பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், 7-ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர் நிர்மல் குமாரின் நடனம் அனைவரையும் கவர்ந்தது.
அந்த மாணவனுக்கு, ஆட்சியர் தனது பேனாவை கொடுத்து ஊக்குவித்தார்.
Next Story