"டாஸ்மாக்கை மூட கூடாது.." - ஒற்றை ஆளாக நின்று போராடிய குடிமகன் | Chengalpattu
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே அரசு மதுபானக்கடையை அகற்றக்கோரி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்கள், குடியிருப்பு பகுதி மற்றும் சாலை அருகே உள்ள மதுபான கடையினால், மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என குற்றம்சாட்டினர்.அடிக்கடி கொலை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறிய அவர்கள், அரசு மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது, மதுபானக்கடையை மூடக்கூடாது என குடிமகன் ஒருவர் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story