அமெரிக்க கம்பனிக்கு அல்வா கொடுத்த சென்னை தம்பதி

x
  • சென்னையில் இருந்து போலியான கொரோனா மருந்துகளை வெளிநாட்டிற்கு அனுப்பி ஆறரை கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, சென்னை கீழ்கட்டளையில் உள்ள மருந்து மொத்த விற்பனை நிறுவனத்தை ஆனைலைனில் அணுகி, எல்சல்வாடர் நாட்டிற்கு கொரோனா மருந்துகள் தேவைப்படுவதாக கூறியுள்ளது.
  • 2 ஆயிரம் குப்பிகள் கொரோனா மருந்துக்கான 6 கோடியே 29 லட்சத்து 63 ஆயிரத்து 325 ரூபாயும் அமெரிக்க நிருவனம் அனுப்பி வைத்துள்ள அனுப்பியுள்ளது.
  • அதன்படி, மருந்துகள் அனுப்ப‌ப்பட்ட நிலையில், போலி மருந்துகளை அனுப்பி ஏமாற்றியதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அமெரிக்க நிறுவனம் புகார் அளித்த‌து. அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு நம்பிக்கை ஆவண மோசடிப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டனர்.
  • இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட மருந்து மொத்த விற்பனை நிறுவன மேலாளர் ஹரிஹர சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்