சிகரெட் பஞ்சுகளை கொண்டு பொம்மை, தலையணை, மேட் தயாரிப்பு - கோவையை கலக்கும் தொண்டு நிறுவனம்
கோவையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம், நிலத்திற்கும் நிலத்தடி நீருக்கும் கேடான சிகரெட் துண்டு பஞ்சுகளை சேகரித்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், அந்தப் பஞ்சை சுத்திகரித்து பொம்மை, தலையணை, மேட் போன்றவற்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும், சிகரெட் பஞ்சுகள் போடப்படும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு சேமிப்பு பெட்டிகளையும் வைத்துள்ளது. இந்த புதிய முயற்சியின் மூலம், கோவை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு தலையணைகள் போன்ற பொருட்களை தயாரித்துக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர். கோவை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் 15 முதல் 20 பெட்டிகள் வைத்து, சிகரெட் கழிவுகள் சேகரிக்கப்படும் எனவும், இந்த திட்டம் 100 வார்டுகளிலும் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story