கோயில் வளாகத்தில் பணியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கு.. உடலை வாங்க மறுத்து போரட்டம்...

x

நெல்லையில் கோயில் வளாகத்தில் பணியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு நாட்களுக்கு பிறகு உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர்.


நெல்லை நவநீத கிருஷ்ணசாமி கோவிலில் பணியாளராக பணியாற்றி வந்தவர் கிருஷ்ணன்.


இவர் பொங்கல் பண்டிகையின் போது கோயிலுனுள் மது அருந்தியவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது.


இதில், ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணனை கொலை செய்து கும்பல் தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அரசு தரப்பில் உரிய நிவாரணம் வழங்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், கோயில் அறங்காவலர் குழுவின் பேச்சுவார்த்தைக்கு பிறகு 6 நாட்கள் கழித்து உறவினர்கள் உடலை பெற்றுக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்