திடீரென தீ பிடித்து எரிந்த கார்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்
கேரள மாநிலம் மூணாறில் சுற்றுலாப் பயணிகள் சென்ற கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. மாட்டுப்பட்டி டேம் அருகே காரை நிறுத்திவிட்டு, குளிருக்காக ஹீட்டரை வெகு நேரம் இயக்கியுள்ளனர். பின்னர், காரை ஸ்டார்ட் செய்த போது, எஞ்சினில் தீ பிடித்து புகை வெளியேறியது. உடனடியாக காரில் இருந்த 7 பேரும் வெளியேறினர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். இதனால், அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story