திடீரென தீ பிடித்து எரிந்த கார் - பழனி மலை அடிவாரத்தில் பரபரப்பு
பழனி அடிவாரம் அருகே கார் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அடிவாரத்தில் நடந்த திருமணத்திற்கு வந்திருந்தவர், சாலையோரத்தில் தனது சொகுசு காரை நிறுத்திச் சென்றுள்ளார்.
இந்த கார் திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கிய பார்த்த பொதுமக்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
Next Story